டாக்டர் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

The trailer of the movie Doctor starring Sivakarthikeyan will be released on the 6th

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் வருகின்ற 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வெற்றியை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டிரைலர் வருகின்ற 6 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. மேலும் இந்த டாக்டர் படம் வருகின்ற 26 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து வெளியான அணைத்து படங்களும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் இந்த டாக்டர் திரைப்படத்திற்காக காத்துள்ளார்கள். மேலும் டாக்டர் படம் திரைத்துறை யினருக்கு நம்பிக்கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.