சூர்யாவுக்கு வில்லனாகும் டாக்டர் பட பிரபலம்...!

It is said that Vinay Roy will play the villain for Surya in Surya 40

சூர்யா 40 படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக வினய் ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக வினய் ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் டாக்டர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.