தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா...??

It has been reported that Dhanush and Bhavana were the first to star in the film Thanga Meenkal

தங்க மீன்கள் படத்தில் முதலில் தனுஷ் மற்றும் பாவனா தான் நடிக்கவிருந்ததாக தகவல்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்க மீன்கள். தந்தை மகள் பாச கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மகளாக சாதனா என்பவர் நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் முதன்முதலாக ராம் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம், முதன் முதலாக இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷை வைத்து தான் இயக்குனர் ராம் இயக்கத் திட்ட மிட்டு இருந்தாராம் ஆனால் சில கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவில்லையாம். அதைபோல் நடிகை பாவனாவும் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாம் அவரும் கால்ஷீட் இல்லாத காரணத்தால் அவரும் நடிக்கவில்லை.