மாஸ்டர் பவானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா...?

It has been reported that RK Suresh will be playing the role of Bhavani played by Vijay Sethupathi in the master film for the first time.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் ஆர்.கே சுரேஷ் தான் முதன் முதலாக நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ், மகேந்திரன், நடிகை ஆண்ட்ரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியான 41 வது நாளாக மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து அசத்தி இருப்பார். தனது அசுரத்தனமான வில்லன் நடிப்பால் மக்களை கவர்ந்த விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவியும் அவரை புகழ்ந்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க முதன் முதலாக நடிகர் ஆர்.கே சுரேஷிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் சில காரணங்களால் ஆர்.கே சுரேஷ் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம்.