பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

பொல்லாதவன் படத்தில் நடிக்க நடிகை பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகி அவருடனும் எடுத்த போட்டோஷுட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பொல்லாதவன் படத்தில் நடிக்க நடிகை பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகி அவருடனும் எடுத்த போட்டோஷுட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007 ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை திவ்யா ஸ்பந்தனா நடித்திருந்தார். மேலும் நடிகர் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி, பானு பிரியா, சென்ராயன், முரளி, மனோபலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை திவ்யா ஸ்பந்தனா நடித்திருந்தார். முதன் முதலாக இந்த படத்தில் நடிக்க தேர்வானது காஜல் அகர்வால் தான், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலுடன் எடுத்த போட்டோஷுட் கூட வெளியானது. அதைபோல் அடுத்ததாக இந்த படத்தில் நடிக்க நடிகை பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகி அவருடனும் எடுத்த போட்டோஷுட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node
பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?