குக் வித் கோமாளி வெற்றியாளர் யார் தெரியுமா.? வெளியான ரகசிய தகவல்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில்,

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸை விட மக்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமான டிவி நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான் என்று கூறலாம்.

unknown node

ஏனென்றால், ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு காமெடியாக கொண்டு சென்றது தான். இரன்டு சீசனுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்க்கு மூன்றாவது சீசனுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

unknown node

இந்த நிலையில், தற்போது நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, சந்தோஷ், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி இருந்தனர். கடந்த வாரம் நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கான ஷூட்டிங் விறு விறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

unknown node

அந்த இறுதி போட்டியில், மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிகா சிறப்பாகப் சமைத்து குக் வித் கோமாளி 3 சீசனின் டைட்டிலை வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும் என தெரிகிறது.