இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2109-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.
unknown nodeஒரே நாள் இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
unknown nodeஇப்படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு தரமான பின்னணி இசையை இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வழங்கியிருப்பார்.
unknown nodeமுதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. அதற்கான பணிகள் ஒருபக்கம் விறு விறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், கைதி படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ். கைதி படத்தின் அடுத்த பாகத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்த தகவலை அவரே சமீபத்திய ஒரு பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.