பிக் பாஸ் சீசன் 5-வில் மாஸ்டர் படத்தில் நடிகர் ஒருவர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் நான்காவது சீசனில் ஆரி டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
unknown nodeஅடுத்ததாக 5 வது சீசன் பிரமாண்ட செட் அமைத்து அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி இரவு 10 – 11 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. கமல்ஹாசன் கலந்து கொள்ளும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பாகும்.
unknown nodeஇந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5- வில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்ப்பு நிலவியுள்ளது. மேலும், தொகுப்பாளினி பிரியங்கா, ஜாக்குலின், சுனிதா,பாவனி ரெட்டி, சூசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
unknown nodeஅந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மாஸ்டர் படத்தில் நடித்த சிபி சந்திரன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.