தெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன்..! ஹீரோ யார் தெரியுமா..??

It has been reported that Karnan will be a remake in Telugu and his son Bellamkonda Sai Srinivas will play the hero.

கர்ணன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், ஹீரோவாக அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. வருகின்ற மே 8 ஆம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளார். படத்தில்  ஹீரோவாக அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.