வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த படம் எந்த படம் தெரியுமா..??

Director Vetrimaran has said that his favorite film is Subramania Subramaniapuram

இயக்குனர் வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் சுப்ரமணிய சுப்ரமணியபுரம் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெற்றி மாறன். இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய சிறந்த படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மத்தியில் நீங்காத இடம்பிடித்தார். மேலும் தற்போது நடிகர் சூரியை வைத்து நாவலை தழுவி ஒரு படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் மனதை கவர்ந்து ரொம்ப பிடித்த திரைப்படம் எது என்ற கேள்விக்கு அவர் கூறியது” எனக்கு சுப்ரமணிய சுப்ரமணியபுரம் படம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். சசிகுமார் இயக்கத்தில் நட்பை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.