"பத்து தல " படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா...?

It has been reported that the shooting for the ten-head film will start from next March.

பத்து தல திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது . ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிலும் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் கிருஷ்ணா இயக்குனர் கெளதம் மேனனுடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.