அட்லீ-ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..??

Filming for the Aadli Shah Rukh Khan starrer is set to begin in December.

அட்லீ ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பதால் படம் கைவிட்டு போனது என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்திற்கான படப்பிடிப்பை முதன் முதலில் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.