ஷங்கர் & ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா...?

It has been reported that the shooting for the Shankar & Ramcharan co-production will start in 5 months.

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்கள் கழித்து தான் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது அவர் விரைவில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு 5 மாதம் கழித்து தான் தொடங்கும் என்று கூறப்படுகிறது ஏனெனில் நடிகர் ராமச்சரன் ஆர் ஆர் படத்தில் நடித்த முடித்தவுடன் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.