திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாம் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்திலிருந்து வெளியான தாய் கிழவி பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த பாடலை தனுஷே எழுதி அவரே பாடியிருந்தார்.

unknown node

இந்த நிலையில், தற்போது தனுஷ் குரலில், மேகம் கருக்காத என்ற திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற இரண்டாம் பாடல் வரும் ஜூலை 15 -ஆம் தேதி வெளியாகும் என சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் ப்ரோமோவுடன் அறிவித்துள்ளது.

unknown node