வலிமை படத்தின் வேற லெவல் அப்டேட்... ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

The first look of the movie 'Valaimai' starring Ajith will be released on March 11

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.இதனை கண்டித்து தல அஜித் வெளியிட்ட அறிக்கையில் சரியான நேரத்தில் வலிமை அப்டேட் வெளிவரும் என்றும்,இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். சமீபத்தில் வலிமை படத்தினை விஜய்யின் மாஸ்டர் படத்தினை போன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்த இரண்டே வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது . இந்த நிலையில் தற்போது வலிமை படத்திற்கான மோஷன் போஸ்டர் மற்றும் ஃ பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.