D43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

It has been reported that the crew is planning to release the first look title for Dhanush starrer D43 on July 28, Dhanush's birthday.

தனுஷ் நடித்துள்ள D43 படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டில் தனுஷ் பிறந்த நாளான 28 ஆம் தேதி ஜூலை மாதம் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த D43 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆம் தனுஷ் பிறந்த நாளான 28 ஆம் தேதி ஜூலை மாதம் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.