சூர்யா 40 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது தெரியுமா..??

It has been reported that the first look poster title for Surya 40 will be announced at the end of April.

சூர்யா 40 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதியில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தை செப்டம்பர் மாதத்தில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதியில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.