சர்வம் தாளமயம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா....?

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த பிரபலமான நடிகராக உள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சர்கார் படம் பல

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த பிரபலமான நடிகராக உள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சர்கார் படம் பல சறுக்கல்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய், நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராகவே கருதப்படுகிறார். இவரை மக்களுக்கு மட்டுமல்லாமல், பல சினிமா பிரபலங்களுக்கும் பிடித்தமான நடிகர் என்று கூட கூறலாம்.

இந்த வகையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நிஜத்தில் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகராக உள்ளார். சர்வம் தாளமயம் என்ற படத்திலும் விஜய் ரசிகராகவே நடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறியிருந்த நிலையில், பிப்ரவரி 1ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.