ராஜமவுலியின் RRR படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியாகிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

It has been officially announced that RRR, directed by Rajamavuli, will be released on October 13, Rajamavuli's RRR movie.

ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR எனும் படம் அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற பாகுபலி படத்தைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கு முன்னணி கதாநாயகனாக ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம் அதாவது RRR என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். டிவிவி  தானைய்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியாபட் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான  சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கான ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் 13ஆம் தேதி தசரா பண்டிகையை ஒட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.