இந்தியன் – 2 படப்பிடிப்பு எப்போது...எங்கு தொடங்குகிறது தெரியுமா.?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் "இந்தியன் 2". இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வந்தது.

unknown node

படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு, நடைபெற்று வந்தபோது க்ரேன் விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது, பிறகு கொரோனா பரவல் தொடர்ந்தது வந்ததாலும், படப்பிடிப்பை தொடங்கமுடியாமல் போய்விட்டது.

unknown node

பிறகு ஷங்கர் ராம் சரணை வைத்து படம் இயக்க சென்று விட்டார். கமல்ஹாசனும் விக்ரம் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா..? இல்லையா என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்தது.

unknown node

இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியன் 2 தொடங்கப்படவுள்ளதாம். ஆம், வரும் செப்டம்பர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாம். இதற்காக நடிகர் கமல்ஹாசன், தன்னை தயார்படுத்திக் கொள்ள அமெரிக்க சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு பிறகு அவர் சென்னை திரும்புவார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.