கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா...??

Art director Ramalingam has said that Mari Selvaraj first had the name Pandya Rajas for the Karnan film

கர்ணன் படத்திற்கு முதலில் மாரி செல்வராஜ் முதலில் பாண்டிய ராஜாக்கள் என்று தான் வைத்திருந்ததாக கலை இயக்குனர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்துவருகிறது.

இந்த நிலையில் கலை இயக்குனர் ராமலிங்கம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கர்ணன் படத்திற்காக முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்னவென்று கூறியுள்ளார். அதாவது இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் முதலில் பாண்டிய ராஜாக்கள் என்று தான் வைத்திருந்தாராம். ஆனால் சில காரணங்களால் வைக்கவில்லையாம். மேலும் கர்ணன் திரைப்படம் தற்போது நல்ல வசூல் சாதனை படைத்தது வருகிறது விரைவில் 100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.