D43 படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் என்ன தெரியுமா..??

Director Karthik Narain has revealed the details of Dhanush's role in D43 in a recent interview.

D43 படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த D43 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” படத்தில் தனுஷ் விசாரணை பத்திரிகையாளராக நடிக்கிறார்.  கமர்சியல் மற்றும் தில்லர் படமாக D43 இருக்கும் எனவும் கூறியுள்ளார்.