தளபதி விஜயின் அடுத்த படம் என்ன தெரியுமா..?

தளபதி விஜயின் அடுத்த படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

தளபதி விஜயின் அடுத்த படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.

இந்த நிலையில் இந்த படத்தை தொடந்து நடிகர் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக செம்ம மாஸ் லைன் ஒன்றை முருகதாஸ் பிடித்துள்ளாராம்.

அதை பல கதாயாசிரியர்களுடன் சேர்ந்து முருகதாஸ் திரைக்கதையை உருவாக்கி வருகிறாராம். ஏனெனில் சர்கார், தர்பார் ஆகிய படங்களில் முருகதாஸ் சறுக்கியதால் இதில் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.