வடிவேலு நடிக்கவுள்ள புதிய படத்துக்கான தலைப்பு என்ன தெரியுமா...?

Vadivelu's new film directed by Suraj is titled Nai Sehgar.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள புதிய படத்துக்கு நாய் சேகர் என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு மீதான பிரச்சனைகள் அனைத்தும் தற்போது தீர்க்கப்பட்டுள்ள நிலையில் ,அவர் இயக்குனர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைக்கா நிறுவனத்தின் பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் எனத் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் வடிவேலுடன் நடிக்க முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

unknown node