தெலுங்கில் வெறித்தனமாக வெளியான மாஸ்டர் டீசர்..!

The Telugu teaser actor vijay acting of the master movie is currently out and going viral to youtupe and social media

மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதனிடையே, சென்ற தீபாவளி தினத்தன்று ரசிகர் பெரும் எதிர்பார்ப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் தமிழில் வெளியாகி இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது வருகிறது. மாஸ்டர் டீசர் யூடியூபில் அதிகம் கமெண்ட், லைக்ஸ், அதிவேக வீவ்ஸ் என பல சாதனைகள் படைத்துள்ளது. ட்ரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு விருது அளித்தது. அண்மையில், ட்விட்டர் இந்திய மாஸ்டர் திரைப்படம் நடப்பாண்டு அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தகத்து.

அதுமட்டுமில்லாமல், நெய்வேலியில் எடுக்கப்பட்ட விஜய் புகைப்படம் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node