டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போம் தெரியுமா..?

Actor Sivakarthikeyan's Doctor is reportedly planning to release the film on April 14.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தினை வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தினை வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.