ஆடுகளம் படத்தில் த்ரிஷா வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..??

It is learned that Trisha has quit acting in the film Aadukalam

ஆடுகளம் படத்தில் த்ரிஷா நடிப்பிலிருந்து வெளியேறிய காரணம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக டாப்சி நடித்து இருந்தார். மேலம் இந்த திரைப்படத்தில் நரேன், கிஷோர், ஜெயபாலன், முருகதாஸ், சென்றாயன், ஜெயபிரகாஷ் அட்டகத்தி தினேஷ், வினேஷ் பாலாஜி ஆகியோர் நடித்து இருந்தனர் .இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து தேசிய விருது வென்றது.

ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகை டாப்சி கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது நடிகை த்ரிஷா தானாம். 4 நாட்கள்  படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வந்த த்ரிஷாவிற்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தவும் உடனடியாக சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.