அண்ணாத்த படத்தின் முதல் பாடல் பெயர் என்ன தெரியுமா..??

Information about the name of the first song of the movie Annatha has gone viral on the social networking site

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் பெயர் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது , இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னெவென்றால், அண்ணாத்த திரைப்படத்திரக்கான முதல் பாடல் பெயர் குறித்த தகவல் பரவி வருகிறது, அதாவது அண்ணாத்த படத்தின் முதல் பாடல் “அண்ணாத்த அண்ணாத்த அடிதடி சரவெடி வெடியெல்லாம் ” என்று தொடங்குவதாக தகவல்கள் பரவி வருகிறது.