நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான ஆக்சன் திரைப்படம் வலிமை. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. படம் வெளியாகி 30-வது நாளாக பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
unknown nodeநாளை இந்த திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை ஓடிடியிலும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். படம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிகொண்டு வருகிறது.
unknown nodeஆனால் சமூக வலைத்தளத்தில் ஒரு சிலர் வலிமை படம் தோல்வி எனவும் வசூலில் சொதப்பியுள்ளதாகவும் கூறிவருகிறார்கள். இதற்கு முடிவு தரும் வகையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் படம் 200கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
unknown nodeஇந்த படத்தை இயக்குனர் ஹெச்,வினோத் இயக்கியுள்ளார். படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா,புகழ், சைத்திரா ரெட்டி, மேலும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்கள். பின்னணி இசை ஜிப்ரான் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node