சென்னையில் சுல்தான் படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா...??

En los tres días transcurridos desde su lanzamiento, Sultan ha recaudado Rs 1.49 crore solo en Chennai.

வெளியான மூன்று நாட்களில் சுல்தான் திரைப்படம் சென்னையில் மட்டும் 1.49 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திகிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான விர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் 1.49 கோடி வசூல் செய்துள்ளது. நாளிற்கு நாள் இந்த திரைப்படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.