சென்னையில் "சக்ரா" திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா...?

It has been reported that the movie Chakra starring actor Vishal has collected 1.3 crores in Chennai alone in 1 day.

நடிகர் விஷால் நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியான 1 நாளில் இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் 1.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் நாளை 4 மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெளியானது, மேலும் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுவருகிறது. இந்த நிலையில் வெளியான 1 நாளில் இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் 1.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.