பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்கும் நெப்போலியன்.!எந்த படம் தெரியுமா.?

It has been reported that Napoleon will play his grandfather in the upcoming movie 'Anparivu'.

ஹிப் ஹாப் ஆதி தற்போது நடித்து வரும் அன்பறிவு படத்தில் அவருக்கு தாத்தாவாக நெப்போலியன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நான் சிரித்தால் . ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஆதி .

“அன்பறிவு”என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக “சிவப்பு மஞ்சள் பச்சை” படத்தில் நடித்த காஷ்மீரா நடித்துள்ளார் .அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், சசிகுமார், ஊர்வசி,சங்கீதா கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .இந்த படத்தின் பூஜையுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வந்தது.

கிராமத்து கதையம்சம் கொண்ட கதையாக உருவாகும் இந்த படத்தில் ஆதிக்கு தாத்தாவாக பிரபல நடிகர் நெப்போலியன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வெளிநாட்டில் செட்டிலாகி வந்த இவர் சமீப காலமாக தமிழ் படங்களில் நடிப்பது குறைவு.இந்த நிலையில் தற்போது அன்பறிவு படத்தில் தாத்தாவாக நடித்துள்ளதாக கூறப்படும் செய்தி எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.