நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், சாண்டி மாஸ்டர் சாமியாராக மாறியுள்ளார். இதனையடுத்து, அவர் கட்டிலில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கையில், கவின் ஏதாவது ஒன்றை உருட்டிக் கொண்டு, சத்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கிறார். உடனே சாண்டி சத்தம் போடாதடா என சொல்லுகிறார். இருப்பினும் வேணுமென்றே சாண்டியை தொந்தரவு செய்கிறார்.
unknown node