தலயின் அரசியலை பற்றி கூறிய இயக்குனர் !!!!!
தல நடித்த படம் ‘விஸ்வாசம்’இது வரும் 10 ந் தேதி திரைக்கு வர உள்ளது.மேலும் இந்த படம் குறித்து பிரபலங்களும் ,ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சிவாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.அஜித் அரசியலை பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்ட போது அவர் அரசியலில் ஒரு தெளிவான முடிவில் இருக்கிறார்.
மேலும் நடிகர் அஜித்திடம் இந்த கேள்வியை சிவா கேட்ட போது ‘நான் சினிமாவில் வேலை தேடி வந்துள்ளேன் என்னுடைய வேலைகளை நான் சரியாக செய்வேன்.மற்றும் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்’ என்றும் கூறினார்.’நான் அரசியல் செய்ய வர வில்லை’ என்றும் அஜித் கூறினார்.என்று இயக்குனர் சிவா கூறியிருக்கிறார்.