இயக்குனர் பாரதிராஜா முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரானபாரதிராஜாஇன்று தனது இல்லத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
unknown node