இயக்குநர் ஏஆர் முருகதாஸின் புதுமுயற்சி.! அடுத்த படம் வேற லெவலில் இருக்கும் போலயே.!

Director AR Murugadoss is said to be directing an animated film for Hot Star. Kochadaiyan has been already released as an animated film .

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ்.கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.அடுத்தாக தளபதி விஜய்யை வைத்து படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து விலகியுள்ளார்.தற்போது இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் முதல் முறையாக அனிமேஷன் படம் ஒன்றை இயக்கவுள்ளராம்.ஓடிடி நிறுவனமான ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக அனிமேஷன் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது .

ஏற்கனவே தமிழ் சினிமாவில் அனிமேஷன் படமாக கோச்சடையான் திரைப்படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.தற்போது ஏஆர் முருகதாஸ் அவர்களும் தன்னை நிரூபிக்கும் வகையில் புதிய முயற்சியாக அனிமேஷன் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.