விஸ்வாசம் படத்தில் நயன்தாரா மற்றும் அஜித் நடித்துள்ளார்கள்.மேலும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தின் சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன். இந்த படத்தின் சண்டை பயிற்சிகள் குறித்து திலீப் சுப்புராயன் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘விஸ்வாசம்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் புதுமையாக இருக்கும்.ஒவ்வொரு சண்டைக் கலைஞரையும் தல அஜித் அவர்கள் மதிப்பார்.மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்.அஜித் சார் மிகவும் கண்ணியமான நபர். ட்ரெய்லரில் பார்த்த மழை சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தது என்று இயக்குனர் சிவா என்னை பாராட்டினார்.
மேலும் அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாக இருந்தது.அதே நேரம் எமோஷனல் விஷயங்களும் அதில் நிறைய இருக்கிறது. படம் ரிலீஸ் ஆகிய பின்பு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.என்று கூறியுள்ளார்.