சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கிய இந்தப்படத்தில், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிகாலை முதலே திரையரங்கு வாசலில் குவிந்த ரசிகர்கள் மேள தாளம், பட்டாசு என ஆரவாரத்துடன் பட ரிலீஸை கொண்டாடினர்.
unknown nodemaveeran trailor launch [Image- Twitter/@ShanthiTalkies]
அந்த வகையில், மாவீரன் படத்தை சென்னை ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் அமர்ந்து பார்த்தார். பல பிரபலங்களும் இந்த ரோஹிணி திரையரங்கில் வந்து மாவீரன் படத்தை கண்டு களித்தனர்.
unknown nodeSivakarthikeyan [Image source : file image]
மாவீரன் விமர்சனம்:
எந்த வம்புதும்புக்கும் போகாத கோழை தன் குடியிருப்பு மக்களின் பிரச்னைக்காக குரல் எழுப்பி மாவீரன் ஆவதே படத்தின் கதை. அதாவது, பயந்த சுபாவம் கொண்ட சிவகார்த்திகேயன், ஒரு ஊடகத்தில் ஓவியராக வேலைப்பார்க்கிறார்.
unknown nodeSivakarthikeyan [Image Source : Twitter/@Premkumar__Offl]
அப்போது, விபத்துக்குள்ளாகும் சிவகார்த்திகேயனுக்கு ஏதோ சூப்பர் பவர் கிடைக்கிறது. அதன் பின் பத்திரிக்கைக்காக வரையும் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது என்பதே படத்தின் கதையம்சம் ஆகும்.
unknown nodeSivakarthikeyan in Maaveeran [Image Source : Twitter/@kollywoodnow]
இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். இதோ மாவீரன் ட்விட்டர் விமர்சனம்….
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node