கம்பேக் கொடுத்தாரா பிரசாந்த்! அந்தகன் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

அந்தகன் : 90 கிட்ஸ்களின் டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்தகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-எண்டரி கொடுத்துள்ளார். இந்த

Andhagan

அந்தகன் :90 கிட்ஸ்களின் டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்தகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-எண்டரி கொடுத்துள்ளார். இந்த படத்தினை அவருடைய தந்தையும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் 2018-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்.

இந்த படத்தில் நடிகர் பிரஷாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

unknown node

படம் பார்த்துவிட்டு ஒருவர் ” அந்தகன் – அசாதாரண சீட் எட்ஜ் த்ரில்லர் படம். படத்தின் ஒரிஜினலை பார்த்தவர்கள் கூட ரசிக்கிறார்கள். பிரசாந்த் படத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும்! தவறவிடாதீர்கள்டாப்ஸ்டார் மீண்டும் வந்துள்ளார்” என கூறியுள்ளார்.

unknown node

மற்றோருவர் “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஒரு தகுதியான தமிழ் ரீமேக் படமாக இந்த படம் இருக்கும். இயக்குனர் தியாகராஜன் படத்திற்காக சரியான நடிகர்கள் தேர்வுகள் செய்து இருக்கிறார். படத்தின் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கிறது. பிரஷாந்த் & சிம்ரன் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள், ஈர்க்கக்கூடிய முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதி. கண்டிப்பாக படம் பாருங்கள்” என கூறியுள்ளார்.

unknown nodeunknown node

மற்றோருவர் “அந்தகன் ஒரு பாராட்டுக்குரிய முயற்சியாகும், இது #அந்தாதுனின் சிலிர்ப்புகளையும் குளிர்ச்சியையும் வெற்றிகரமாக மீட்டெடுக்கிறது. பிரசாந்தின் நடிப்பு டாப். சஸ்பென்ஸ் நிறைந்த சூப்பர் திகில் படம் கண்டிப்பாக பாருங்கள்” என கூறியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node

படத்திற்கு விமர்சனங்கள் மிகவும் பாசிட்டிவாக வரும் காரணத்தால் கண்டிப்பாக இந்த படம் பிரஷாந்திற்கு வெற்றி படமாக அமையும் என்றே கூறப்படுகிறது. விமர்சனங்கள் நன்றாக வருவதால் வசூல் ரீதாகவும் படம் நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown nodeunknown nodeunknown node
கம்பேக் கொடுத்தாரா பிரசாந்த்! அந்தகன் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!