அந்தகன் : 90 கிட்ஸ்களின் டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்தகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-எண்டரி கொடுத்துள்ளார். இந்த படத்தினை அவருடைய தந்தையும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் 2018-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தில் நடிகர் பிரஷாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் […]