ஓடிடியில் வெளியாகும் தனுஷின் "ஜகமே தந்திரம்"... ?

It has been reported that the movie will be released on ODD just 2 weeks after the release of Jagame Tantra in theaters.

ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 2 வாரங்கள் கழித்து மாஸ்டர் படத்தை போலவே இந்த படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

அதன் பிறகு படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் வெளியான நிலையில், எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான 2 வாரங்கள் கழித்து மாஸ்டர் படத்தை போலவே இந்த படமும் (Netflix)ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.