தனுஷ் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த செல்வராகவன்..!!

Director Selvaragavan said on his Twitter page that he was getting ready for the shooting

நானே வருவேன் படப்பிடிப்புக்கு தயாராகிறது என்று இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் “இந்த அளவிற்கு முன் தயாரிப்பில் நான் எந்தப் படத்திற்கும் ஒருபோதும் பணியாற்றவில்லை. நானே வருவேன் படப்பிடிப்புக்கு தயாராகிறது” என்று இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். மீண்டும் திரும்பி இந்தியா வந்த வுடன் நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பு கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

unknown node