தனுஷிற்கு ஜோடியாகும் பிகில் இந்துஜா..??

It is said that Dhanush will be paired with two heroines in the movie Naane Varuven

நானே வருவேன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தயாராகிறது என்று இயக்குனர் செல்வராகவன் தனது நேற்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். மீண்டும் திரும்பி இந்தியா வந்த வுடன் நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பு கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானதை தொடர்ந்து தமன்னா நடிப்பது உறுதியவிட்டதாகவும் தகவல் பரவி வந்தது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மற்றோரு நடிகையாக மேயாத மான், பிகில் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை இந்துஜாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.