நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeசன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
unknown nodeவிரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான இரண்டு படங்களும் சரியாக போகாத காரணத்தால், இந்த திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்.
Well it’s been a while isn’t ? Thiruchitrambalam from august 18th. See you all in theatres. pic.twitter.com/foFZmqronV
— Dhanush (@dhanushkraja) June 15, 2022