நடிகர் தனுஷ் தற்போது “தி க்ரே மேன்” என்ற அதிரடியான ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளார்கள். தமிழையும் தாண்டி ஹாலிவுட்டிலும் தனுஷ் கலக்கி வருவதால், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeஇந்த படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக இந்த படம் வெளியாகவுள்ளது.
unknown nodeஇதனை முன்னிட்டு, கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்ற “தி கிரே மேன்” பிரீமியர் காட்சிக்கு தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் வந்துள்ளார். கோட்ஷூட் அணிந்துகொண்டு தனது மகன்களுடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeunknown node