வித்தியாசமான தோற்றத்தில் தீபிகாபடுகோனின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்

This cinima news gives information about deepakapadugans first look poster in a different look-vithiyasamana thorathil theepika padukonin firstlookposter

ராசி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சர் “சபாக் ” படத்தை  இயக்குகிறார்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் இந்த படத்தில் லஷ்மி கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

டெல்லியை சேர்ந்த லஷ்மி என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து அவர் சமூகத்தில்   தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்கு லஷ்மி உதவி வருகிறார்.இதற்காக சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா  2014ஆம் ஆண்டு வழங்கி லஷ்மியை பெருமைப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த கதையை மையமாக கொண்டு ‘ராசி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சர் “சபாக் ” படத்தை  இயக்குகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் இந்த படத்தில் லஷ்மி கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தீபிகா மிகவும் சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். நடிகை  திபீகா படுகோன் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போன்று தத்ரூபமாக காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. சபாக் திரைப்படத்தை அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.