நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாகிறது
இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeஇதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் டான் திரைப்படம் வரும் மே 13- ஆம் தேதி வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், “.ராஜமௌலி அவர்கள் இயக்கத்தில், உச்ச நட்சத்திரங்களான Jr. NTR மற்றும் ராம் சரண் நடிப்பில், மார்ச் 25ஆம் தேதி RRR” என்றும் பிரம்மாண்ட திரைப்படம், உலக அளவில் வெளிவர இருக்கிறது. லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் மற்றும் எஸ்.கே. ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, நட்சத்திர நடிகர் திரு. சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில், “டான்” திரைப்படம் அநே மார்ச் 25 ஆம் தேதி வெளிவருவதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “RRR” இரைப்படம் வெளியாவதை கருத்தில் கொண்டு, தனது “டான் ரிவீசுக்கான தேதியை மாற்றுவதற்கு ஒப்புக் கொண்ட இரு சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், இவ்விரு படங்களையும் கண்டு களித்து கொண்டாடப் போகும் உங்களுக்கும் எங்களின் பெரும் மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்…” என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown node