ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.
இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்று வாங்கியுள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் நீளம் என தெரியவந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்ப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
unknown nodeஇப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இப்படம் 159 நிமிடங்கள் ஓடும். அதாவது இப்படம் 2 மணி நேரம் 39 நிமிடம் படத்தின் நீளம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.