நடிகர் நகுல் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
2008ல் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நகுல் ஜெய்தேவ் . தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் சுனைனாவுடன் இணைந்து ‘எரியும் கண்ணாடி’ படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு இவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மனைவி கர்ப்பமாக உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகுல் தெரிவித்துள்ளார். தற்போது அந்த தம்பதியருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
unknown node