கோப்ரா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லும் சியான்..!

Actor Vikram is leaving for Russia tomorrow to star in the final scene of the upcoming Cobra film directed by director Ajay Gyanamuthu.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் கடைசி காட்சியில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் நாளை ரஷ்யா செல்கிறார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்திலிருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தில் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பு முடிக்க தற்போது கோப்ரா படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கோப்ரா படத்தின் கடைசி காட்சியில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் நாளை ரஷ்யா செல்கிறார், இந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பார். அதற்கு பிறகு இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 60 வது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.